உள்ளூர் செய்திகள்

மெட்டாவெர்ஸ்: கவலையில் இன்டர்போல்

ஒருபக்கம் உலகமெங்கும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பமான 'மெட்டாவெர்ஸ்' எனும் மெய்நிகர் உலகம் குறித்து பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், சர்வதேச காவல் துறையான, 'இன்டர்போல்' கவலையில் உள்ளது.காரணம், இந்த புதிய டிஜிட்டல் உலக அறிமுகத்தால், குற்றங்களும் அதிகரிக்க கூடும் என்று கருதுவதால் தான். மெட்டாவெர்ஸ் வருகை, புதிய வகை இணைய குற்றங்களை உருவாக்கக்கூடும் என, இன்டர்போல் கருதுகிறது. மேலும், தற்போது உள்ள குற்றங்களும் குறிப்பாக, நிதி சம்பந்தமான குற்றங்களும் பெரிய அளவில் படரும் என்றும் அஞ்சுகிறது.அத்துடன், பயங்கரவாத செயல்பாட்டுக்கும், இந்த தளம் பயிற்சிகளை மேற்கொள்ள பயன்படக்கூடும் என்றும் கருதுகிறது.தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க, அவை சம்பந்தமான குற்றங்களும் அதிகரிக்கும் என்பது தான் புதிய சிக்கலாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !