மைக்ரோசாப்ட் சர்பேஸ்
'மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2' மற்றும், 'மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3' ஆகியவை, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்த இரண்டும், உலக சந்தையில் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும் என்பதை, அந்த சமயத்தில், மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை.'மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2' டேப்லெட், 8வது தலைமுறை இன்டெல் கோர் எம் பிராசஸர் உடன், 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரியுடன் வந்துள்ளது. நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.'மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3', 13 மற்றும், 15 அங்குல திரையுடன் வந்துள்ளது.விலை: 'மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2' டேப்லெட், 47,599 ரூபாயில் துவங்கி, 63,499 ரூபாய் வரை ஆகிறது.'மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 3', 1.56 லட்சம் ரூபாயில் துவங்கி, 3.40 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.