உள்ளூர் செய்திகள்

மிவி சவுண்டுபார்கள்

உள்நாட்டைச் சேர்ந்த, ஆடியோ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'மிவி' புதிதாக இரு சவுண்டுபார்களை அறிமுகம் செய்துள்ளது. 'மிவி போர்ட் எஸ் 16' மற்றும் 'எஸ் 24' என இரு சவுண்டுபார்கள் அறிமுகம் ஆகியுள்ளன.இந்த இரு சவுண்டுபார்களையும் ஆக்ஸிலரி, யு.எஸ்.பி., மைக்ரோ எஸ்.டி., என பலவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும் புளுடூத் வாயிலாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு சவுண்டுபார்களும் 2.0 சேனல் சிஸ்டத்துடன், 'பேலன்ஸ்டு ஆடியோ'வை வழங்கும்.இவற்றில் 'வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்' இருப்பதால், எளிதாக குரல் வழி உத்தரவுகளை வழங்கி, கன்ட்ரோல் செய்யலாம். ஆறு மணி நேரம் வரை இவற்றின் பேட்டரி தாக்குப் பிடிக்கும். போர்ட் எஸ் 16 சவுண்டுபார் 16 வாட் 'அவுட்புட்'டும், எஸ் 24 சவுண்டுபார் 24 வாட் 'அவுட்புட்'டும் தரவல்லது.விலைபோர்ட் எஸ் 16: 1,499 ரூபாய்போர்ட் எஸ் 24: 1,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !