உள்ளூர் செய்திகள்

பாஸ்ட் சார்ஜிங் போன்களுக்கு மவுசு

சாம்சங் நிறுவனம், 'கேலக்ஸி ஏ 22 - 5ஜி' எனும் ஸ்மார்ட்போனை தயாரித்து வருகிறது. இந்த போன், 15 வாட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பெரும்பாலான போன்கள், 5 வாட் சார்ஜிங் உடன் தான் வருகின்றன. 15 வாட் சார்ஜிங் எனும் போது, விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இதனால் தற்போது, 15 வாட், 25 வாட் சார்ஜிங் கொண்ட போன்களுக்கு அதிக மவுசு நிலவுகிறது.சந்தையின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, 'கேலக்ஸி ஏ 22 - 5ஜி' போன், 15 வாட் சார்ஜிங் வசதியுடன் வர இருக்கிறது. ஆண்ட்ராய்டு, 11 உடன் வரும் இந்த போன், 6 ஜி.பி., ரேம் கொண்டதாக இருக்கக்கூடும். மேலும் இதன் முதன்மை கேமரா, 48 மெகா பிக்சல் திறன் கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்த போன் விற்பனைக்கு வரக்கூடும். மேலும் இதன் விலை, 13,000 ரூபாயாக இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !