புதிய டி.சி.எல்., டிவிகள்
டி.சி.எல்., நிறுவனம், இந்தியாவில் புதிய 'ஸ்மார்ட் டிவி' மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.டி.சி.எல்., சி 825, டி.சி.எல்., சி 728, டி.சி.எல்., சி 725 என, மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை, மினி எல்.இ.டி., டிஸ்பிளே தொழில்நுட்பம் கொண்டவையாகும். இந்த ஆண்ட்ராய்டு 'டிவி'கள் 50 அங்குலத்தில் துவங்கி 75 அங்குலம் வரை பல்வேறு அளவுகளில் வந்துள்ளன.இந்த 'டிவி'கள் விலை 64,990 ரூபாயில் துவங்கி, 1.15 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.