உள்ளூர் செய்திகள்

யுடியூப்பில் புதிய வசதி

'யுடியூப்' நிறுவனம், ஐ.ஓ.எஸ்., இயங்கு தளம் கொண்ட,'ஆப்பிள்' நிறுவன சாதனங்களில்,'பிக்சர் இன் பிக்சர்' வசதியை, உலகெங்கிலும் உள்ள அதன் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளது.இதன் வாயிலாக, இனி ஆப்பிள் சாதனங்களை வைத்திருப்பவர்கள், யுடியூப் வீடியோக்களை, சிறிய அளவில் வைத்து பார்த்துக்கொண்டே, பிற செயலிகளை பயன்படுத்தலாம். கடந்த ஜூலையில் இந்த பி.ஐ.பி., வசதியை அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம். இப்போது, இந்தியா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !