உள்ளூர் செய்திகள்

பழமையில் புதுமை

அமேசான் நிறுவனம், எக்கோ இன்புட் சாதனத்தை இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.இதில் என்ன சிறப்பு?ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் கோலோச்சும் நிலையில், தங்களிடம் இருக்கும் பழைய ஸ்பீக்கர் செட்டை என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, இது ஒரு தீர்வாக இருக்கும்.துாக்கிப் போட மனமில்லாத பழைய ஸ்பீக்கருடன், எக்கோ இன்புட் சாதனத்தை இணைத்தால், அடுத்த வினாடியில் அது ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாறிவிடும். அதன்பின், குரல்வழி உத்தரவில் விரும்பிய பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.பழமையையும், புதுமையையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது இந்த எக்கோ இன்புட். அமேசான் எக்கோ, அமேசான் எக்கோ டாட் ஆகியவை ஸ்பீக்கருடன் இருக்கும். இந்த எக்கோ இன்புட்டில் ஸ்பீக்கர் கிடையாது. மிகச் சிறிய சைசில் இருக்கும். இதை நம் ஸ்பீக்கருடன், 3.5 மி.மீ., ஆக்ஸிலரி கேபிள் அல்லது புளூ டூத் மூலமாக இணைத்துவிட்டால் போதுமானது. வீட்டில், 'வைபை' அவசியம் தேவை.பிறகென்ன, கானாவிலிருந்து, ஹங்கமா வரைக்கும் அனைத்தையும் கேட்கலாம். 'அலெக்ஸா ஒரு காதல் பாட்டு போடு' என, உத்தரவிடலாம்!விலை, 2,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !