புதிய ஜாப்ரா இயர்போன்
டென்மார்க்கை சேர்ந்த, 'ஜாப்ரா' நிறுவனம், புதிதாக, 'ஜாப்ரா எலைட் 4 ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, இந்த இயர்போன், ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வருகிறது. அதன் பின், பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த இயர்போன் 6 மி.மீ., டிரவைர்களுடன் வந்துள்ளது. 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியும் கொண்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வசதியாக, நான்கு மைக்ரோபோன்கள் இணைக்கப்பட்டுள்ளன. 'ஸ்பாட்டிபை டேப் பிளேபேக், அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட்' உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.'சார்ஜிங் கேஸ்' உடன் சேர்த்து, மொத்தம் 30 மணி நேரம் சார்ஜ் தாக்குப்பிடிக்கும். இயர்பட்ஸ் மட்டும் 8 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.விலை: 12,000 ரூபாய்.