உள்ளூர் செய்திகள்

புதிய லேசர் புரஜெக்டர்

எல்.ஜி., நிறுவனம் புதிதாக, சினிபீம் 4கே யு.எச்.டி., லேசர் புரஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.இந்த புரஜெக்டர் உடன் இரண்டு ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 4கே துல்லியத்துடன் வீடியோக்களை இதன் மூலம் கண்டு களிக்கலாம். அத்துடன், 40 அங்குலத்திலிருந்து, 300 அங்குலம் வரையிலான திரையை உருவாக்கி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் அறையில் இருக்கும் வெளிச்சத்துக்கு ஏற்ப, படங்களின் வெளிச்சத்தை தானே கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இதன் விளக்கு, 20 ஆயிரம் மணி வரை தாக்குப் பிடிக்கும். எடை, 11 கிலோ. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !