உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய அறிமுகங்கள்

நோக்கியா பிராண்டுக்கான உரிமம் பெற்ற, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம் புதிதாக, 6 நோக்கியா போன்களை அறிமுகம் செய்துள்ளது. 'சி, ஜி, எக்ஸ்' என 3 வகைகளில் அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றில், 'சி' வகை போன்கள் நுழைவு நிலை சந்தைக்கானதாகும். 'ஜி' வகை, மிட் ரேஞ்ச் பிரிவினருக்கானதாகும். 'எக்ஸ்' வகை விலை உயர்ந்த போனாகும்.'நோக்கியா சி' வகை போன்கள் 1 ஜி.பி., x 16 ஜி.பி.,யிலிருந்து துவங்கி, 2 ஜி.பி., x 32 ஜி.பி., வரை உள்ளன. 'ஜி' வகை போன்கள் 3 ஜி.பி., x 32 ஜி.பி., துவங்கி, 4 ஜி.பி., x 64 ஜி.பி., வரை உள்ளன. 'எக்ஸ்' வகை போன்கள், 6 ஜி.பி., x 128 ஜி.பி., துவங்கி, 8 ஜி.பி., x 128 ஜி.பி., வரை உள்ளன.விலை, 7 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 25 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. விரைவில் இவை இந்திய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !