உள்ளூர் செய்திகள்

புதிய நாய்ஸ் ஸ்மார்ட் வாட்ச்

'நாய்ஸ்' நிறுவனம் 'நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் பஸ்' எனும் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 1.69 அங்குல கலர் டிஸ்ப்ளே உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், சதுர வடிவிலானது. 'புளுடூத் காலிங்' வசதி இருக்கிறது.இதனால் போனை எடுக்காமலே, வாட்ச் வாயிலாக அழைப்புகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இத்துடன் இதய துடிப்பு, துாக்கம், ஆக்சிஜன் ஆகியவற்றையும் கண்காணிக்கலாம். வியர்வை துாசு புகாதவாறு தயாரிக்கப்பட்டு உள்ளது. இது, 'நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா பல்ஸ் பஸ்' வாட்சின் அடுத்த மாடலாகும்.அறிமுக விலை 2,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !