உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய டிவிகள்

இந்திய சந்தையில், நோக்கியாவின் புதிய, 'ஸ்மார்ட் டிவி' வரிசைகள் அறிமுகமாகி இருக்கின்றன. இவற்றின் விலை, 12,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.இந்த புதிய, 'ஸ்மார்ட் டிவி' மாடல்கள், ஓ.டி.டி., செயலிகளான, 'யுடியூப், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ்' போன்றவற்றை கொண்டிருப்பதோடு; பிரபல ஜப்பான் பிராண்டான, 'ஆங்கியோ'வின் 48 வாட் சவுண்டு பாரும் கொண்டிருக்கிறது.இந்த டிவிகள், 'ஆண்ட்ராய்டு 9 பை' இயங்குதளத்தில் செயல்படும் வகையில் வந்துள்ளன. மேலும், இதில் யு.எஸ்.பி., போர்ட் மற்றும் எச்.டி.எம்.ஐ., போர்ட் ஆகியவை தேவைக்கேற்ற விதத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன.விலை:32 அங்குலம் எச்.டி., ரெடி: ரூ.12,99943 அங்குலம் முழு எச்.டி.,: ரூ.22,99943 அங்குலம் 4கே : ரூ.28,99950 அங்குலம் 4கே: ரூ.33,99955 அங்குலம் 4கே: ரூ.39,99965 அங்குலம் 4கே: ரூ.59,999


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !