நோக்கியா லேப்டாப்
நோக்கியா, லேப்டாப் தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாகவும்; விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் எனவும் பேச்சு பலமாக அடிபடுகிறது.இந்திய தர நிர்ணய கழகத்தின் வலைதளத்தில், சில சான்றிதழ்கள் காணக்கிடைப்பதை வைத்து, நோக்கியா லேப்டாப் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்கிறார்கள்.கடந்த, 2009ம் ஆண்டில்,'நோக்கியா புக்லெட் 3ஜி' அறிமுகத்துடன், தன் அதிர்ஷ்டத்தை, லேப்டாப் பிரிவில் பரிசோதித்து பார்த்தது, நோக்கியா நிறுவனம்.இருப்பினும், இப்போது முயற்சியில் இறங்கி இருப்பது, நோக்கியா பிராண்டு உரிமம் பெற்ற நிறுவனமே அன்றி, நோக்கியா நிறுவனமல்ல.பிராண்டு நோக்கியாவுடையது தான்; ஆனால், லேப்டாப் நோக்கியாவுடையது இல்லை!