உள்ளூர் செய்திகள்

நோக்கியாவின் புதிய பியூச்சர் போன்

'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், புதிதாக ஒரு போனை அறிமுகம் செய்துள்ளது.'நோக்கியா 2780 பிளிப்' எனும் பெயரில், இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மடக்கவும், நீட்டவும் வசதி கொண்ட இந்த போன், 'போல்டபிள் ஸ்மார்ட் போன்' கிடையாது. சாதாரண 'பியூச்சர்' போனாகும். 'டச் ஸ்கிரீன்' வசதி எல்லாம் இதில் கிடையாது. 'டி9 கீபோர்டு' வசதி உள்ளது.பட்டன்களை அழுத்தி பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இம்மாதம் 15ம் தேதி முதல், அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில், பிற நாடுகளிலும் அறிமுகம் ஆகும்.

சிறப்பம்சங்கள்

வெளிப்புறம் 1.77 அங்குல திரைஉட்புறம் 2.7 அங்குல திரை4 ஜி.பி., ரேம்512 எம்.பி., சேமிப்பு திறன்1,450 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்எப்.எம்., ரேடியோநீலம், சிவப்பு எனஇரு வண்ணங்கள்விலை: தோராயமாக 7,450 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !