நத்திங் இயர் ஸ்டிக் இந்தியாவில் விற்பனை துவங்கியது
அண்மையில் அறிமுகம் ஆன 'நத்திங்' நிறுவனத்தின், 'நத்திங் இயர் ஸ்டிக்' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்', விற்பனை இந்தியாவில் 17ம் தேதி முதல் துவங்கி உள்ளது.சீனாவைச் சேர்ந்த 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து, தனியாக 'நத்திங்' எனும் நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளார்.இந்நிறுவனம், 'ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ்' ஆகியவற்றை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது நத்திங் இயர் ஸ்டிக் எனும் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.