உள்ளூர் செய்திகள்

போர்ட்ரானிக்ஸ் எம்.போர்ட் 13 சி

'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், '13 இன் 1 யு.எஸ்.பி., டாக்கிங் ஸ்டேஷன்' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'போர்ட்ரானிக்ஸ் எம்போர்ட் 13 சி' எனும் பெயரில் இந்த யு.எஸ்.பி., டாக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த செப்டம்பரில், 'எம்போர்ட் 11 சி' அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த புதிய யு.எஸ்.பி.டாக் அறிமுகம் ஆகியுள்ளது.இதில் மொத்தம் 13 போர்ட்டுகள் உள்ளன. இதை லேப்டாப், மேக்புக், பெர்சனல் கம்ப்யூட்டர் போன்றவற்றுடன் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.இதில் 2 யு.எஸ்.பி. டைப் சி போர்ட்டுகள், 4 யு.எஸ்.பி., 3.0 போர்ட்டுகள், எஸ்.டி., கார்டு ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி.,கார்டு, ஈத்தர்நெட் போர்ட், 3.5 மி.மீ., ஜேக், எச்.டி.எம்.ஐ., வி.ஜி.ஏ., டைப் சி பி.டி., 3.0 போர்ட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.ஓராண்டு உத்தரவாதத்துடன் வந்துள்ளது.விலை: 3,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !