உள்ளூர் செய்திகள்

பிரீமியம் பார்ட்டி ஸ்பீக்கர்

'சோனி' நிறுவனம், தொடர்ந்து பல ஸ்பீக்கர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் அதன் 'எக்ஸ் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்கள்' வரிசையில், 'எஸ்.ஆர்.எஸ்., - எக்ஸ்.வி., 900' எனும் பவர்புல் லவுடுஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பிரீமியம் புளூடூத் பார்ட்டி ஸ்பீக்கர்.உருளை வடிவம் கொண்ட இந்த ஸ்பீக்கர், 26.6 கிலோ எடை கொண்டது.இதை எளிதாக துாக்கிச் செல்லவும், நகர்த்தவும் கைப்பிடி மற்றும் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஸ்பீக்கரின் மேல் பகுதியில் பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. கண்ணைக் கவரும் ஒளிவிளக்குகளும் இதில் இடம்பெற்றுள்ளன.இதில், '4 வே பாஸ் ரிபிளக்ஸ்' ஸ்பீக்கரும், ஆறு டுவீட்டர் ஸ்பீக்கர்களும் உள்ளன. அத்துடன் 'எக்ஸ் பேலன்ஸ்டு ஸ்பீக்கர்' உள்ளிட்ட பல ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.கிட்டத்தட்ட 25 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் இதில் உள்ளது.விலை: 79,900 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !