உள்ளூர் செய்திகள்

சாம்சங் 11.1.4 சவுண்டுபார்

சாம்சங் நிறுவனம், இந்த ஆண்டில் பல மாடல்களில் சவுண்டுபார்களை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. ஏ, க்யு மற்றும் எஸ் ஆகிய வரிசைகளில் சவுண்டுபார்கள் அறிமுகம் ஆகியுள்ளன. இதில் க்யு சீரிஸ், உலகின் முதல் 11.1.4 சேனல் சவுண்டுபார் ஆகும்.இந்த 11.1.4 சேனல் கொண்ட க்யு சீரிஸ் சவுண்டுபாரில், '3டி' ஆடியோவை கேட்டு ரசிக்கலாம். டால்பி அட்மோஸ், டி.டி.எஸ்: எக்ஸ் ஆகியவற்றையும் இது சப்போர்ட் செய்யும்.சாம்சங் க்யு சீரிஸ் சவுண்டுபார்கள் விலை, 44 ஆயிரம் ரூபாயில் துவங்கி, 1.48 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. ஏ சீரிஸ் விலை 28 ஆயிரத்தில் துவங்கி, 48 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.எஸ் சீரிஸ் சவுண்டுபாரின் விலை 48 ஆயிரம் ரூபாய் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !