உள்ளூர் செய்திகள்

சாம்சங் 5ஜி போனின் விலை 10 ஆயிரம் ரூபாய் குறைந்தது

'சாம்சங் கேலக்ஸி எப்., 23 5ஜி' போனின் விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.நாட்டில் 5ஜி சேவைகள் துவங்கிவிட்ட நிலையில், முக்கிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவை வசதியை அளிக்கக்கூடிய போன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி எப்., 23 5ஜி போனின் விலை, 'பிளிப்கார்ட்' தளத்தில், 10 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை ஆகிறது.துவக்கத்தில் இந்த போனின் விலை 23 ஆயிரத்து 999 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரத்து 999 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இது தவிர, கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளும் இந்த போனுக்கு சில சலுகைகளை வழங்குகின்றன.

சிறப்பம்சங்கள்:

* 6.2 அங்குல திரை * முழு எச்.டி., பிளஸ் டிஸ்ப்ளே* 6 ஜி.பி., ரேம்* 128 ஜி.பி., சேமிப்பகம்* 50 எம்.பி., முதன்மை கேமரா* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி* 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !