உள்ளூர் செய்திகள்

சாம்சங் 5ஜி போன்

சாம்சங் நிறுவனத்தின், 'கேலக்ஸி எம்.62, 5ஜி' ஸ்மார்ட்போன், விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போனுடைய, 4ஜி மாடல், இந்தியாவில், 'சாம்சங் கேலக்ஸி எப் 62' எனும் பெயரில் அறிமுகம் ஆனது.தற்போது, 5ஜி மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இற்கேற்ப, அரசுத் துறைகளின் அனுமதியை கோரியிருக்கிறது. குறிப்பாக, இந்திய தர நிர்ணய ஆணையம் உள்ளிட்டவற்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்6.7 அங்குல முழு எச்.டி., திரை,8ஜி.பி., ரேம்,128 சேமிப்பகம்,1 டி.பி., வரை நீட்டிக்கலாம்,7,000 எம்.ஏ.எச்., பேட்டரி,25 வாட் விரைவு சார்ஜிங்,நான்கு கேமரா செட் அப்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !