சாம்சங் பிரேம் டிவி 2021
'சாம்சங்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக, 'தி பிரேம் டிவி 2021' எனும் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியை பார்க்காத நேரத்தில், அதை ஓவியங்கள் உள்ளிட்டவற்றை காட்டுமாறு செய்து கொள்ளலாம்.தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரேம் டிவியில், 1,400 ஓவியங்கள் கொண்ட தொகுப்பை நாம் அணுக முடியும். இந்த டிவி 43, 50, 55, 65 அங்குலம் என பல்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முந்தைய மாடலைவிட, 46 சதவீதம் அளவுக்கு மெலிதானதாகும். இதன் திரை, 4கே கியூஎல்இடி மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் விலை, 62 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.