சத்தமில்லாமல் விலையை அதிகரித்த சாம்சங்
'சாம்சங்' நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன்கள் சிலவற்றின் விலையை, சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது.சாம்சங் கேலக்ஸி எப் - 02 எஸ், எம் - 02 எஸ் மற்றும் ஏ - 12 ஆகியவற்றின் விலையை அதிகரித்துள்ளது. இம்மூன்று போன்களின் விலையும், 500 ரூபாய் அதிகரித்துள்ளது. இது குறித்து சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அதன் இணையதளத்தில் விலையை அதிகரித்து வெளியிட்டு உள்ளது.உலகளவில், 'மைக்ரோ சிப்' தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அனைத்து பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, விலையை அதிகரித்திருக்கக்கூடும் என்கிறார்கள். இந்த மூன்று போன்களுமே, இந்த ஆண்டில் அறிமுகம் ஆன, பட்ஜெட் போன்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.