குறைந்த விலையில் வருகிறது சாம்சங் போல்டபிள் போன்
'சாம்சங்' நிறுவனம், அதன் மடிக்கும் வகையிலான, 'போல்டபிள்' ஸ்மார்ட்போன்களை, குறைந்த விலையில், அடுத்த மாதம் அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கேலக்ஸி இசட் போல்டு 3' போனின் விலை, இதற்கு முந்தைய மாடலின் விலையை விட, 17 சதவீதம் குறைவாக இருக்கும் என்கிறார்கள்.மேலும், 'கேலக்ஸி இசட் பிளிப் 3' மாடல் போனின் விலை, முந்தைய மாடலை விட, 22 சதவீதம் அளவுக்கு குறைவாக இருக்கும் என இணையதளங்களில் செய்திகள் வருகின்றன.போல்டபிள் போன்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும்; ஆப்பிளின் போட்டியை சமாளிக்கும் பொருட்டும், இந்த விலை குறைப்பு நடவடிக்கையில், சாம்சங் இறங்கி இருப்பதாக, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கேலக்ஸி இசட் போல்டு 3 போன், 'எஸ்.பென் புரோ'வை சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.