சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர்
சாம்சங் நிறுவனம், புதிய ஸ்மார்ட் மானிட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. 'சாம்சங் ஸ்மார்ட் மானிட்டர் எம் 5' மற்றும் 'ஸ்மார்ட் மானிட்டர் எம் 7' என, இரண்டு வகையான மானிட்டர்கள் அறிமுகம் ஆகியுள்ளன. 'எம் 5' மானிட்டர், 27 அங்குல திரை கொண்டதாகும். 'எம் 7' மானிட்டர், 32 அங்குல திரை கொண்டதாகும்.இந்த மானிட்டர்களில் நெட்பிளிக்ஸ், யு டியூப், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓ.டி.டி., செயலிகளை, லேப்டாப் அல்லது 'பெர்சனல் கம்ப்யூட்டர்' இணைப்பு இன்றியே பார்த்துக் கொள்ளலாம். இன்னும் சொல்வதானால், மானிட்டராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; டிவியாகவும்,பயன்படுத்தி கொள்ளலாம். எம் 5 மானிட்டர், முழு எச்.டி., திரை கொண்டதாகும். எம் 7 மானிட்டர், 4 கே திரை கொண்டதாகும். இரண்டு மானிட்டர்களும் இரண்டு, எச்.டி.எம்.ஐ., போர்ட், மற்றும் 3 யு.எஸ்.பி., போர்ட் கொண்டவையாகும்.மேலும், புளுடூத் வி 4.2 மற்றும் வைபை இணைப்பு வசதியும் கொண்டுள்ளது. அத்துடன், இரண்டு சேனல் ஸ்பீக்கர்களும் மானிட்டரிலேயே இருக்கின்றன. மேலும், சாம்சங் ஸ்மார்ட்போன்களையும் இணைத்துக் கொள்ளலாம்.'எம் 5' மானிட்டர், 3.6 கிலோவும்; 'எம் 7' மானிட்டர், 5.4 கிலோவும் எடை கொண்டவையாகும். விலை : 'எம் 5' மானிட்டர்: 28,000 ரூபாய் 'எம் 7' மானிட்டர்: 57,000 ரூபாய்அறிமுக விலை: 'எம் 5' மானிட்டர்: 21,999 ரூபாய் 'எம் 7' மானிட்டர்: 36,999 ரூபாய்