உள்ளூர் செய்திகள்

சாம்சங்கின் புதிய 5ஜி போன்

'சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி' ஸ்மார்ட்போன், இந்தியாவில் 25ம் தேதி அறிமுகம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்நிறுவனம், 'கேலக்ஸி எம் 32 4ஜி' போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் 6 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெற்றது குறித்து சந்தையில் அப்போது பெரிதாக பேசப்பட்டது.இப்போது அடுத்தக் கட்டமாக, 'கேலக்ஸி எம்32 5ஜி' போன் அறிமுகம் ஆகிறது. இருப்பினும், இந்த போனில் 5 ஆயிரம் எம்.ஏ.எச்., பேட்டரி தான் இடம்பெறும் என்கினறனர்.சிறப்பம்சங்கள்:6.5 அங்குல எச்.டி., திரை 48 மெகா பிக்ஸல் கேமரா13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரிஆண்ட்ராய்டு 11


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !