சாம்சங்கின் அடுத்த தாக்குதல்
'சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி' ஸ்மார்ட்போன், அறிவிக்கப்பட்டதை போலவே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் இந்நிறுவனம், 'கேலக்ஸி எம் 32 4ஜி' போனை அறிமுகம் செய்தது. தன் அடுத்த கட்டமாக, தற்போது இதே மாடலில், 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.இந்த போன் இரண்டு வண்ணங்களில் வருகிறது. அத்துடன், 6 ஜி.பி., x 128 ஜி.பி., மற்றும் 8 ஜி.பி., x 128 ஜி.பி., என இரு விதங்களில் வருகிறது.கூடுதல் சிறப்பம்சங்கள்:6.5 அங்குல எச்.டி., திரை 48 மெகா பிக்ஸல் கேமரா13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா5,000 எம்.ஏ.எச்., பேட்டரிஆண்ட்ராய்டு 11விலை:6 ஜி.பி., x 128 ஜி.பி., : 20,999 ரூபாய்8 ஜி.பி., x 128 ஜி.பி., : 22,999 ரூபாய்.