சாம்சங்கின் சத்தமில்லா அறிமுகம்
சாம்சங் நிறுவனம் எந்த சப்தமும் இல்லாமல், கடந்த வெள்ளியன்று, 'சாம்சங் கேலக்ஸி ஏ 23 5ஜி' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இதன் விலை மற்றும் எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை இன்னும் தெரிவிக்கவில்லை.இதற்கு முந்தைய மாடலான 'சாம்சங் கேலக்ஸி ஏ 22 5ஜி' இந்தியாவில், கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 6 ஜி.பி., ரேம் மற்றும் 128 ஜி.பி., சேமிப்பகம் கொண்ட மாடல், 19 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனது. கேலக்ஸி ஏ 23 5ஜி போனின் விலை, இதைவிட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.சிறப்பம்சங்கள்* ஆண்ட்ராய்டு 12* 4/6/8 ஜி.பி., ரேம் மாடல்கள்* 64/128 ஜி.பி., சேமிப்பக வசதி* 1 டி.பி., வரை அதிகரிக்கலாம்* 6.6 அங்குலம் டிஸ்ப்ளே* 50 எம்.பி., பிரதான கேமரா* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி* 197 கிராம் எடை.