சென்ஹைசர் பட்ஜெட் சாதனங்கள்
சென்ஹைசர் நிறுவனம், இந்தியாவில், இரண்டு ஒயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எச்.டி.,250 பி.டி., சி.எக்ஸ்., 120 பி.டி., என்ற இந்த இரண்டும், 'பட்ஜெட்' சாதனங்களாகும்.எச்.டி.,250 பி.டி., ஹெட்போனை ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 25 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். புளுடூத் 5 இணைப்பு வசதி கொண்ட இந்த ஹெட்போனை, சென்ஹைசர் ஸ்மார்ட் கன்ட்ரோல் செயலியை கொண்டு, அடிப்படையான சிலவற்றை இயக்கலாம்.இதன் விலை, 5,490 ரூபாய் ஆகும்.சி.எக்ஸ்., 120 பி.டி., ஒரு நெக்பேண்டு இயர்போன் ஆகும். புளுடூத் 4.1 இணைப்பை சப்போர்ட் செய்யும் வகையில் வந்திருக்கும் இந்த இயர்போனை, ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்து கொள்ள முடியும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 6 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.விலை: 3,490 ரூபாய்.