உள்ளூர் செய்திகள்

சோனி சவுண்டு பார்

கடந்த 25ம் தேதியன்று, உலகம் முழுக்க, 'சோனி' நிறுவனத்தின், 'சோனி எச்.டி., எஸ்400' எனும் புதிய சவுண்டு பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2.1 சேனல் சவுண்டுபாரில், ஒயர்லெஸ் சப் வூபர் உள்ளது.இந்த சப் வூபர் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு செய்யப்பட்டு உள்ளது. 330 வாட் அவுட்புட் கொண்ட இந்த சவுண்டு பாரில், 'டால்பி டிஜிட்டல் அட்மோஸ்' ஆடியோ வசதியும் உள்ளது. இதை குறிப்பிட்ட சில சோனி 'டிவி'களுடன் இணைக்கும்போது, டிவி வாயிலாகவே சவுண்டுபாரை கட்டுப்படுத்திக் கொள்ள இயலும்.அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் முதல் விற்பனை வர உள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து இன்னும் சோனி அறிவிக்கவில்லை. எதிர்பார்க்கப்படும் விலை: 22,500 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !