சோனி சூப்பர் டிவி
சோனி நிறுவனம், உலகளவில் சோனி பிரேவியா எக்ஸ் 80 ஜே மாடல் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. இவை, 43 அங்குலம் முதல், 75 அங்குலம் வரை திறை அளவு கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் தற்போது இந்தியாவில், 65 அங்குலம் டிவியை அறிமுகம் செய்துள்ளது. மற்ற மாடல்கள் விரைவில் அறிமுகம் ஆகும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.சோனி பிரேவியா கேடி 65 எக்ஸ் 80 ஜே எனும் 65 அங்குல டிவியில், கூகுள் அசிஸ்டென்ட் வசதி இருக்கிறது. அத்துடன் டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் எக்ஸ் பேலன்ஸ்டு ஸ்பீக்கர் ஆகியவையும் உள்ளன.இந்த டிவி தூசி, மின்னல், மின் அழுத்தம் போன்றவற்றால் பெரிதாக பாதிக்கப்படாது.விலை 1.30 லட்சம் ரூபாய்.