உள்ளூர் செய்திகள்

சோனி வாய்ஸ் ரிக்கார்டர்

'சோனி' நிறுவனம் புதிதாக,'சோனி பி.சி.எம்., ஏ.10' எனும், 'வாய்ஸ் ரிக்கார்டரை' அறிமுகம் செய்துள்ளது.மிக அதிக தரத்திலான, 'ஆடியோ ரிக்கார்டிங்' வசதி கொண்ட இந்த ரிக்கார்டரை, ஸ்மார்ட்போன் மூலமாக கன்ட்ரோல் செய்துகொள்ள முடியும்.இதில் இருக்கும், 'அட்ஜஸ்டபிள் மைக்ரோபோன்' மூலம், வேறுபட்ட சூழ்நிலைகளிலும், எளிதாக ரிக்கார்டு செய்யலாம்.இதன் பேட்டரி, 15 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டதாகும்.இதில் இருக்கும், 'ஸ்டீரியோ மைக்ரோபோனை', மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். 16 ஜி.பி., சேமிப்புத் திறன் வசதியும் இதில் உள்ளது. 'மைக்ரோ எஸ்.டி., கார்டு, 'மூலமாக, சேமிப்பு வசதியை அதிகரித்து கொள்ள இயலும்.கிட்டத்தட்ட, 5 ஆயிரம் கோப்புகளை இதில் வைத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக, 6 மணி, 35 நிமிடங்கள் வரை ரிக்கார்டு செய்ய முடியும்.இதன் எடை, 82 கிராம் மட்டுமே.விலை: 19,990 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !