உள்ளூர் செய்திகள்

குறைவான எடையில் நிறைவான ஸ்பீக்கர்

'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில், 'போர்ட்டபிள் புளூடூத் ஒயர்லெஸ் ஸ்பீக்கர்' ஒன்றை, புதிதாக அறிமுகம் செய்துள்ளது. மிகவும் எடை குறைவானதாகவும்; கையாள எளிதாகவும் இருக்கும் இந்த ஸ்பீக்கர், பிலிப்ஸ் டி.ஏ.எஸ்., 2505பி., எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதன் எடை, வெறும் 190 கிராம் மட்டுமே என்பது, இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட சதுர வடிவில், 9.1 செ.மீ., x 4.1 செ.மீ., x 9.15 செ.மீ., எனும் அளவில், இந்த ஸ்பீக்கர் தயாரிக்கப்பட்டு உள்ளது.இதில் தொங்கவிடுவதற்கான பட்டை இருப்பதால், பைக்கில் தொங்கவிட்டுக் கொண்டு செல்லலாம் என்பது கூடுதல் வசதி.இந்த ஸ்பீக்கரின் வலது பக்கத்தில், ஐந்து பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் வாயிலாக, தேவைக்கேற்ப ஸ்பீக்கரை செயல்படுத்தலாம். இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கரில், மைக்ரோபோன் வசதியும் உள்ளதால் போன் அழைப்புகளையும் ஏற்கலாம்.புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது.பத்து மணி நேரம் வரை பயன்படுத்தும் வகையில், 800 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரியும் இதில் உள்ளது.விலை: 4,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !