சூப்பர் ஆடியோ; சூப்பர் பேட்டரி
'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில் புதிய இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.'சென்ஹைசர் சி.எக்ஸ்., பிளஸ், சி.எக்ஸ்., ட்ரூ' என, இரு வகை இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.சி.எக்ஸ்., பிளஸ் இயர்பட்ஸ், வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் வந்துள்ளது. அதேபோல், வெளிப்புற சப்தங்களை கேட்கும் வகையிலும், சவுண்ட் மோடை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.சென்ஹைசர் சி.எக்ஸ்., ட்ரூ இயர்பட்சை பொறுத்தவரை, வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கிடையாது. இவை இரண்டுமே, 24 மணி நேரத்துக்கும் கூடுதலாக தாக்குப் பிடிக்கும் வகையிலான பேட்டரியை கொண்டு உள்ளன.விலைசி.எக்ஸ்., பிளஸ் : 14,990 ரூபாய்.சி.எக்ஸ்., ட்ரூ : 10,990 ரூபாய்.