போட் ஒரே சமயத்தில் ஆறு அறிமுகங்கள்
உள்நாட்டை சேர்ந்த, நுகர்வோர் மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான 'போட்', அண்மையில் நான்கு புதிய ஆடியோ சாதனங்கள், இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.எக்ஸ்டென்டு புரோ ஸ்மார்ட் வாட்ச்இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.78 அங்குல 'அமோல்டு டிஸ்ப்ளே' உடன் வந்துள்ளது. 700க்கும் மேற்பட்ட 'ஆக்டிவ் மோடு'கள், அரை மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்ற முடிவது ஆகியவை குறிப்பிடத்தகுந்தவையாகும். முகப்பை 100 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். 'புளுடூத் காலிங், வாய்ஸ் அசிஸ்டென்ஸ்' ஆகிய வசதிகளும் உள்ளன. மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.விலை: 3,499 ரூபாய்ராக்கர்ஸ் 330/333 பி.டி., இயர்போன்கள்'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் கூடிய 'ராக்கர்ஸ் 330' மற்றும் 'ராக்கர்ஸ் 333 பி.டி.,' என இரண்டு இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. முதலில் குறிப்பிட்டிருப்பது ஐந்து வண்ணங்களிலும்; அடுத்து குறிப்பிடப்பட்டிருப்பது நான்கு வண்ணங்களிலும் வந்துள்ளன.விலை: 1,499 ரூபாய் அவான்டே பார் ஆபராநவீனகால வடிவமைப்புடனும், பல்வேறு வசதிகளுடனும் இந்த 'சவுண்டு பார்' அறிமுகம் ஆகியுள்ளது. 'பில்டு இன் அலெக்ஸா' இதில் இருப்பது கூடுதல் வசதி. 120 வாட் 'போட் சிக்னேச்சர் சவுண்டு'டன் வந்துள்ள இந்த சவுண்டுபாரில், 'ஈக்குவலைசர் மோடு'கள், 'டுயல் பார் பீல்டு மைக்'குகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. விலை: 1,999 ரூபாய்ஏர்டோப்ஸ் 413 ஏ.என்.சி.,இந்த இயர்போன், 25 டெசிபல் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' வசதியுடன் வந்துள்ளது. 20 மணி நேரம் இதன் பேட்டரி சார்ஜ் தாங்கும். 10 மி.மீ., 'டிரைவர்கள்' கொண்டது. இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது.விலை: 1,999 ரூபாய்ஏர்டோப்ஸ் 121 புரோசமீபத்திய புளுடூத் தொழில்நுட்ப இணைப்பு வசதியான 'வி 5.3' உடன், இந்த இயர்போன் வந்துள்ளது. 40 மணி நேரம் வரை இதில் சார்ஜ் தாக்குப்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.விலை: 1,299 ரூபாய்வேவ் கால் ஸ்மார்ட் வாட்ச்'பில்ட் இன் ஸ்பீக்கர், புளுடூத் காலிங்' ஆகிய வசதிகளுடன், இந்த ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 1.69 அங்குல எச்.டி., டிஸ்ப்ளே கொண்டது. பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.விலை: 1,999 ரூபாய்