உள்ளூர் செய்திகள்

புதிய கூகுள் குரோம்காஸ்ட்

'கூகுள் டிவி' செயலி உடனான 'குரோம்காஸ்ட்' சாதனம் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த 'மீடியா ஸ்ட்ரீமிங்' சாதனம், 2020ல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.இப்போது தான் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வருகிறது. இந்த கூகுள் டிவி உடன் கூடிய குரோம்காஸ்ட், 4 கே எச்.டி.ஆர்., வீடியோ பிளேபேக் வசதி கொண்டதாகும். மேலும் 'டால்பி விஷன்' சப்போர்ட்டும் உள்ளது.இதற்கு முன் வந்த 'குரோம்காஸ்ட் 3' போல இல்லாமல், இதில் கூகுள் டிவி யும் இணைக்கப்பட்டு உள்ளதால், கூகுள் டிவி செயலி வாயிலாக படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை காணலாம்.ஐரோப்பிய நாடுகளில், இம்மாதம் 21 ம் தேதி அறிமுகம் ஆகும் என தெரியவந்துள்ளது. இந்தியாவில் எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இந்த சாதனம், 3,900 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் என்ன விலை என்பது வந்தால் தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !