பயர் டிவி ஸ்டிக்கின் அடுத்த அவதாரம்
'அமேசான்' நிறுவனம், அதன், 'பயர் டிவி ஸ்டிக்' வகைகளை மேம்படுத்திக் கொண்டே போகிறது. தற்போது, 'பயர் டிவி ஸ்டிக் 4கே மேக்ஸ்' எனும் புதிய, 'டிவி ஸ்ட்ரீமிங்' சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முந்தைய, 'பயர் டிவி ஸ்டிக் 4கே' சாதனத்தை விட, மேம்படுத்தப்பட்டது என்பது இதன் பெயரிலிருந்தே தெரிய வருகிறது.இதில், அடுத்ததலைமுறை வைபை 6 இணைப்பு வசதி இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் பயர்டிவி ஸ்டிக் வரிசையில், 'டால்பி விஷன் பார்மெட்'டை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் வந்திருக்கும் முதல் ஸ்டிக் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது முன்பதிவு செய்து பெறலாம். இந்தியாவில் இதன் விலை, 6,499 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.