கடின பணிகளுக்கு கரெக்டான டேப்லெட்
'பானாசோனிக்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக ஒரு டேப்லெட்டை அறிமுகம் செய்து உள்ளது.'பானாசோனிக் டப்புக் எஸ்1' எனும் இந்த டேப்லெட், சரக்கு போக்குவரத்து, களப்பணி சேவைகள், போக்குவரத்து போன்ற துறைகளை சேர்ந்த பணிகளுக்கு மிகவும் ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த டேப்லெட் மிக கடினமான சூழல்களிலும் திறம்பட செயல்படக்கூடியது. மைனஸ் 20 டிகிரியிலிருந்து, 50 டிகிரி வரையிலான சூழலிலும் நன்றாக செயல்படும். இரண்டு விதமான பேட்டரி தேர்வுகளுடன் வந்திருக்கும் இந்த டேப்லெட்டில், ஒருங்கிணைந்த 'பார்கோடு' ரீடரும் உள்ளது குறிப்பிடத் தக்கது.துவக்க விலை: 98,000 ரூபாய்