உள்ளூர் செய்திகள்

போட்டி போடும் சாம்சங் கேலக்ஸி ஏ5 2எஸ்

'சாம்சங் கேலக்ஸி ஏ5 2எஸ் 5ஜி' போன், இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், 'மி 11 எக்ஸ் புரோ, ஐகூ 7 லெஜெண்டு, ஒன்பிளஸ் 9 ஆர், ரியல்மி ஜிடி 5ஜி' ஆகிய போன்களுக்கு போட்டியாக, 40 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான போன்கள் சந்தையில் இறங்கி உள்ளது.இந்தியாவில், இந்த போனின் விலை 35,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது. 6ஜி.பி.ரேம் மாடலின் விலை இது. இதுவே, 8 ஜி.பி., ரேம் மாடலின் விலை 37,499 ரூபாய் ஆகிறது. இந்த இரண்டு வகை போனுமே, 128 ஜி.பி., சேமிப்பக வசதி கொண்டவை. வயலெட், வெள்ளை, கறுப்பு என மூன்று வண்ணங்களில் வந்துள்ளது.இந்த போன் 6.5 அங்குல எச்.டி., திரை கொண்டது. நான்கு கேமரா செட் அப் கொண்ட இந்த போனில், முதன்மை கேமரா 64 மெகா பிக்ஸல் திறன் கொண்டதாகும். இதன் பேட்டரி திறன் 4,500 எம்.ஏ.எச்., ஆகும். 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !