அலெக்ஸாரிமோட்டுடன் டிவி
'டைவா'வின், புதிய, 43 அங்குல டிவி, அண்மையில் அறிமுகம் ஆகியுள்ளது. 'டைவா டி.43 க்யு.எப்.எஸ்.,' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த டிவி ரிமோட்டில், குரல் வழி உத்தரவுகளைப் பிறப்பிக்க உதவும், 'அலெக்ஸா' வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.விரைவில், 32 மற்றும், 39 அங்குல டிவிகளும் சந்தைக்கு வர இருக்கிறது. இந்த டிவியில், முழு எச்.டி., சர்ரவுண்டு சவுண்டுடன் கூடிய, 20 வாட் ஸ்டீரியோ பாக்ஸ் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை உள்ளன.மேலும், குவாட் கோர் ஏ.53 பிராசஸர்; 1 ஜி.பி., ரேம் மற்றும் 8 ஜி.பி., சேமிப்பகம் ஆகியவையும் இந்த டிவியில் உள்ளது.விலை: 24,490 ரூபாய்.