சகாயவிலையில் இரு இயர்பட்சுகள்
'பிடிரான்' நிறுவனம், சகாயவிலையிலான இரண்டு 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சு'களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'பிடிரான் பாஸ்போட்ஸ் பி11' மற்றும் 'பி251பிளஸ்' என இரு இயர்பட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.இவற்றில், பாஸ்போட்ஸ் பி11, காதுக்குள் பொருத்திக் கொள்ளும் வகையிலான இயர்பட்சாகவும், பாஸ்போட்ஸ் பி251 பிளஸ் 'ஸ்டெம்' வடிவிலும் வந்துள்ளன. இரண்டும் 'புளுடூத் 5.1 சிப்செட்' கொண்டவை. 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதியும் இவற்றில் உள்ளன.'பி11' 24 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலும், பி251 பிளஸ் 50 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் வகையிலும் பேட்டரி வசதியுடன் வந்துள்ளன. பி251 மாடலில் போன் அழைப்புகள் தெளிவாக இருக்கும் வகையில் இ.என்.சி., எனும் சுற்றுப்புறச்சூழல் சத்தத்தை கேன்சல் செய்யும் வசதி உள்ளது.விலை:பி11 : 799 ரூபாய்பி 251 பிளஸ்: 999 ரூபாய்