டூ இன் ஒன்
'லினோவோ திங்பேடு எக்ஸ்1 மூன்றாவது தலைமுறை டேப்லெட்' மேம்படுத்தப்பட்டு புதிதாக அறிமுகம் ஆகியுள்ளது.கையாள்வதற்கு டேப்லெட் போலவும், பணிகளுக்கு லேப்டாப் போலவும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. 3கே டச்ஸ்கிரீன் இன்னொரு பிளஸ் பாயின்ட்.பிங்கர் பிரின்ட் ஸ்கேனர், முன்னோக்கிய இரு ஸ்பீக்கர்கள், 8வது தலைமுறை இன்டல் கோர் பிராஸசர், கீ போர்டை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என, கலக்கல் காம்பினேஷனில் உள்ளது.மொத்தத்தில் முரட்டுக் காளை. விலை ரூபாய், 82 ஆயிரத்தை தாண்டுகிறது.