தகவல் சுரங்கம்
உலக தொண்டு நிறுவன தினம்
அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் 89 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகிறது. இது தவிர போர் பாதிப்பு, தொற்றுநோய் காலங்களில் இவற்றின் பணி மகத்தானது. உலகளவில் 1.20 கோடி தொண்டு நிறுவனங்களும், இந்தியாவில் 33 லட்சம் தொண்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன