வாசகர்கள் கருத்துகள் ( 16 )
Great guts ,brave and honesty CM Vijay sir eradicate bribe scam, corruption and commission. You have to implement in all Government departments where Employees indulge this including police department and higher officials too.
தமிழக முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
லஞ்சத்தை முழுவதும் ஒழிப்பது மிகவும் கடினம். ஏனெனில் நாம் அனைவரும் நீண்ட காலமாக பழகி விட்டடோம். முழுக்க ஒழித்து விட்டால் மகிழ்ச்சி தான். அதே சமயம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், புதிய திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
விளம்பரச் சத்தம் அதிகம்.அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சிக்காரரைக் கூட நியமிக்காமல் காசு.கொடுத்தவருக்கு மட்டும் பதவி கொடுத்துள்ளனர்.தவெக ஆட்சியிலும் இலஞ்சம் புழங்குகிறது முதலில் இலஞ்ச ஒழிப்புத் துறையை சரி செய்ய வேண்டும்.
சரியான முன்னெடுப்பே. மேலும் துரிதப்படுத்தவேண்டும்
ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பகுதியில் லஞ்சம் வாங்கிய மின்சார துறையின் AE ஐ கையும் களவுமாக அலுவலகத்திலேயே வெள்ளிக்கிழமை அன்று பிடித்தார்கள் ஆனால் ஞாயிறு காலை ஜாமினில் வெளிவந்து விட்டார். விசாரித்ததில் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து வெளியே வந்துள்ளதாக தகவல். லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளை ஜாமினில் வெளியே விடும் நீதிபதிகளை எப்படி தண்டிப்பது என்பதை இந்த அரசு யோசித்தால் நன்றாக இருக்கும். ஆதாரத்தோடு பிடிபட்டவர்களை குறைந்தது 15 நாட்களாவது ரிமாண்ட் செய்து சிறையில் தள்ளவேண்டும்.
பொதுமக்களும் தைரியமாக முன் வந்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். லஞ்சத்துடனே வாழ்ந்து பழகிவிட்ட அரசு ஊழியர்கள் அவ்வளவு சீக்கிரம் லஞ்சத்தை விட்டு வந்து விடமாட்டார்கள். மக்கள்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.தங்கள் குழந்தைகளாவது லஞ்ச ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் வாழ சிந்திக்க வேண்டும்
இத்தனை காலமாக ஒரு நடவடிக்கையையும் எடுக்காத லஞ்ச ஒழிப்பு துறைமீது தான் முதலில் நடவடிக்கை எடுக்கணும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு இந்த லஞ்ச ஒழிப்பு துறை எத்தனை லஞ்சம் வாங்கியதோ?
Too early to comment Let us wait and see.
தமிழகத்தில் 1962 ல் நடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி முதல் இன்று வரை பல்வேறு ஆட்சிகளை நான் பார்த்து இருக்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில், அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் கையூட்டு இல்லை என்று கூறலாம். அதன் பின்னர் நடந்த திமுக, அதிமுக ஆட்சியில் கூட 1990 வரை மிகப் பெரிய அளவில் ஊழல் புகார் இல்லை என்றே கூறலாம். ஆனால் 1991 ல் தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து லஞ்சம் பேசு பொருளாக மாறியது. அதன் பின்னர் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் மாறி மாறி இருந்து கொண்டு, கோடிகளை குவிக்க ஆரம்பித்தன. விளைவு 35 ஆண்டுகளாக தமிழக அரசு நிர்வாகம் ஊழலில் ஊறித் திளைத்தது. திராவிட கட்சிகளின் 35 ஆண்டு கால ஊழல் ஆட்சிக்கு விஜய் முடிவுரை எழுதி இருக்கிறார். இது மிகவும் பாராட்டுக்கு உரியது. இந்த நிலை தொடர வேண்டும். ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இனி லஞ்சம் பெற மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்!
என்ன முடிவுரை??? வக்கீல் நியமன ஊழல் என்ன ஆச்சு??? அப்புறம் அறநிலைய துறை ஊழல் என்ன ஆச்சு??? என்னோட ரெண்டு கேள்விக்கு நீ ஒழுங்கா பதில் சொல்லு?