வாசகர்கள் கருத்துகள் ( 3 )
S.I.R ஐ பொறுத்த வரை தி.மு.க லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல கைய போட்டு ஸ்ட்ரைட்டா வண்டி ஓட்டுவதில் கில்லாடிகள். இதை எதிர்ப்பது போல் எதிர்த்து எப்படி எதிர் கொள்வது என்பதற்கு தங்கள் ஆட்களுக்கு ஏற்கெனவே பயிற்சியும் கொடுத்து விட்டனர். தேர்தல் ஆணையம் தமிழ் நாட்டில் S.I.R ஐ தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவெடுக்க வேண்டும்.
ஐயா இந்த தலைப்பு கட்டுரை எழுதினவரும் ஆளும் அல்லது ஆளாத கட்சிகளும் இருக்கும் சந்தேகம் "இதனால், ஏராளமானோர், குறிப்பாக, ஏழைகள் மற்றும் சமூகத்தில் உள்ள நலிந்த பிரிவினர் நீக்கப்படலாம். அவர்களால் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போகலாம் என்றும் அரசியல் கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன" சமூக நீதி பேசும் அரசும் ,மற்றக்கட்சிகளும் நலிந்த பிரிவினரிடம் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் எப்படி சமூக நீதியான உணவுப்பொருள்கள் வழங்கல் ,மற்றும் இதர அரசு உதவிகளை வழங்குகிண்றீர்கள் என்று சொல்லவேண்டும் .ஆதார் இல்லையென்றால் குடும்ப அட்டை இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே .அப்படி இருக்கும்போது ஆவணங்கள் இல்லாதவருக்கு அரசு உதவி ஏதும் செய்வதில்லை என்பது தெளிவாகின்றது . இதுதான் அரசு செய்யும் சமூக நீதியா ? மக்களுக்கு ஆவணங்கள் இல்லையென்பதே அரசியலின் குறைபாடு .மக்களை பற்றி சிந்தனை இல்லாத ஆட்சிக்கு நீங்களே அத்தாட்சி .அதைநீக்கி உடனடியாக ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு ,நலிந்த பிரிவினரை நலிந்தவர்களாகவே இருக்கவைக்காமல், தகுந்த ஆவணங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்று கருதி அவர்களும் வரு தேர்தல்களில் வாக்களிக்க எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி ஆவண செய்யவேண்டும் .
தேர்தல் ஆணையம் இந்த நாள் வரை இதே போன்ற திருத்தத்தை குறைந்தது பத்து முறை செய்திருக்கிறது. முறைகேடு நடக்கும் என்று சந்தேகப்பட்டால், அந்தந்த மாநில அரசுகளும், அனைத்து அரசியல் கட்சிகளில் "பூத் லெவல் ஏஜென்ட்" களும் வாக்காளர் உரிமையை பேண உதவி செய்ய முடியும். எந்த சீர்திருத்தத்தையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தேவையற்ற பயம் மற்றும் அவநம்பிக்கை வெளிப்பாடு தான் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று தனிப்பட்ட பணி செய்யும் அலுவலர்கள் முழுமையாக இல்லை. இது எல்லோருக்கும் தெரியும். அந்தந்த மாநில அரசின் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் சம்பந்தமான எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். அப்படி பணி செய்பவர்களுக்கு தக்க ஆலோசனை, அறிவுரை, வழிகாட்டி விதிகளை பட்சி கொடுத்து, நேர்மையாக இந்த சீர்திருத்தத்தை நடத்தி யாரும் பாதிக்கப்படாமல் வெற்றிகரமாக செய்தால் அந்தந்த மாநில அரசுகளுக்கு பெருமை தானே??? எதெற்கெடுத்தாலும் சிறுபான்மை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குரிமை பாதிக்கப்படும் என்று ஒன்றுமே நடக்காத போது சொல்வது எதனால்? எந்த வாக்காளரையும் எவர் வேண்டுமானாலும் தடுக்க முடியாது. இந்திய நாட்டின் குடிமகன், அறிவிக்கப்பட்டுள்ள சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்களை காட்டினால் போதும் பீகாரை பற்றி புலம்புவது தேவையற்ற ஒன்று. பீகாரில் இது போன்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் 20 வருடங்களுக்கு பிறகே நடப்பதால், அங்கு கண்டு பிடித்து நீக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை பெரிதாக தெரிகிறது.