உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / இடஒதுக்கீடு மசோதா தோல்வி; மத்திய அரசுக்கு நல்ல பாடம்

இடஒதுக்கீடு மசோதா தோல்வி; மத்திய அரசுக்கு நல்ல பாடம்

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில், 'நாரி சக்தி வந்தன்' என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த சட்டத்தை, 2029ல் அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக, 131வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவின் சமீபத்திய சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்தது. இது சட்டத்திருத்த மசோதா என்பதால், லோக்சபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இதன்படி, 353 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 298 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், மசோதா தோல்வி அடைந்தது. மசோதா தோல்வி அடையும் என்பது, மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், அதை தாக்கல் செய்தது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன், தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இணைத்ததால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடித்து விட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், 'மசோதாவை எதிர்க்கட்சிகள் தோல்வி அடையச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. மசோதா மீது பார்லி.,யில் விவாதம் நடந்த போது, 'தொகுதி மறுவரையறையின் போது, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, மக்கள் தொகை அதிகம் நிறைந்த வடமாநிலங்கள் மற்றும் மக்கள் தொகை குறைவான தென்மாநிலங்களில் சமச்சீரற்ற முறையில் அதிகரிக்கும். 'அதன் வாயிலாக, தென்மாநிலங்களின் முக்கியத்துவம் குறையும்; வடமாநிலங்கள் கூடுதல் ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்றே தோன்றுகிறது. தொகுதி மறுவரையறையில், அமித் ஷா முன்மொழிந்த 50 சதவீத இடங்கள் அதிகரிப்பு என்பது சரியானதாக தெரிந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அத்துடன், மாநிலங்களுக்கு இடையே தொகுதிகள் எண்ணிக்கையில் பெரிய இடைவெளி ஏற்படும் போது, பல பிரச்னைகள் உருவாகும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி, மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், மசோதா எந்த தெளிவையும் வழங்கவில்லை. அதுவும் தோல்விக்கு காரணமாகி உள்ளது. கடந்த, 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், முதன் முதலில் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது, லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை 494 ஆக இருந்தது. அதன்பின், 1962ல் இரண்டாவது முறையாகவும், 1973ல் மூன்றாவது முறையாகவும் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. மூன்றாவது முறை தான், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்தது. பின், இந்த எண்ணிக்கை, 2001 மற்றும் 2026ம் ஆண்டு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, தற்போது நீட்டிக்க வேண்டும் என்பது, தென்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்தை பெற்றிருந்தாலும், அது அமலாவது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. இந்த தருணத்தில், அந்த மசோதாவை தொகுதி மறுவரையறையுடன் இணைத்ததன் மூலம், வடமாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்கள் என்ற பிரிவினையை துாண்டி விட்டுள்ளது. எனவே, தற்போதைய தோல்வியில் இருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும். இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விஷயங்களில், எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, சுமுக தீர்வு காண்பதே சரியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Ranganathan Ranga
ஏப் 20, 2026 17:59

Opposition parties often focus on blocking actions rather than contributing constructively. Not just on this bill, but in many instances, they tend to rely on criticism without offering practical solutions or proposals, resulting in a waste of time and resources.


Rengaraj
ஏப் 20, 2026 13:01

மறுவரையை பாதிப்பு பாதிப்பு என்று சொல்லும் எதிர்க்கட்சி கூட்டம், அதை எவ்வாறு அணைத்து மாநிலங்களுக்கும் செய்வது என்ற ஆக்கபூர்வமாக யோசனைகளை சொல்லவில்லை. தீர்வை சொல்லவில்லை. கூப்பாடு மட்டுமே போடத்தெரிந்த கூட்டம். அதற்கு யார் வக்காலத்து வாங்கினாலும் அவர்கள் இந்த பிரச்சினையை சரியாக அலசத்தெரியாதவர்கள் என்று தான் சொல்லவேண்டும். இன்னமும் என் மாநிலம், என்ற குறுகிய நோக்கில் பார்க்காமல் தேசம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். வடக்கன், தெக்கன், கிழக்கன் என்று பார்ப்பது அறியாமையை காட்டுகிறது. பணம் , தொழில் , வியாபாரம், முதலீடு, வேலை வாய்ப்பு என்றால் மட்டும் இந்தியா முழுமைக்கும் என்று பார்க்கும் அரசியல்வாதிகள் அரசியல் பண்ணுவதற்கு மட்டும் வடக்கன், தெக்கன் என்று மக்களை பிரித்து குறுகிய எண்ணத்தை விதைக்கிறார்கள். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்கு துணைபோகின்றன. இது நாட்டின் சாபக்கேடு. ராணுவத்தினர் நாட்டை எதிரிகளிடம் இருந்து காவல் காக்கும் போது இப்படியா வடக்கு தெற்கு , மாநில உரிமை , என்றா பார்க்கின்றனர் ?? இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் மட்டும் ஏன் இப்படி பார்த்து மக்களை பிரிக்கவேண்டும். ??? இது மத்திய அரசுக்கான பாடம் அல்ல, மக்களுக்கான பாடம் ஊடகங்கள் இதை புரிந்துகொள்ளவேண்டும்.


R MANIVANNAN
ஏப் 20, 2026 13:36

சரி நீங்களாவது ஆக்க பூர்வம்ஆன யோசனை சொல்லலாமே


venugopal s
ஏப் 20, 2026 12:59

ஆவணத்தில் ஆடக்கூடாது என்று இதற்காகத்தான் சொல்வார்கள்!


ஆகுயர்த்தோன்
ஏப் 20, 2026 12:16

முதலில் நீங்கள் ஒரு MAJORITY அரசு இல்லை MINORITY அரசு தான் அப்புறம் எப்படி சாத்தியம் , உங்களிடம் உள்ள MP 243 ,2/3 வோட்டு வேண்டும் அதாவது 362 MP வேண்டுமாம் , ஆகவே எப்போதும் முடியாது இது என்னமோ மாநிலங்களில் MLA க்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றி அமைப்பது போலவா மோடி அவர்களே


ஆரூர் ரங்
ஏப் 20, 2026 14:20

NDA கூட்டணியாக தேர்தலை சந்தித்து கூட்டாக ஆளுகிறது. பல கட்சியினர் முக்கிய அமைச்சர்களாக உள்ளனர். NDAவுக்கு தேவையான அளவுக்கு அதிகமாக மெஜாரிட்டி உள்ளது. முதலில் அரசியல் அடிப்படை தெரிந்து கருத்துப் பதிவு செய்யுங்க.


Seekayyes
ஏப் 20, 2026 16:50

#ஆகுயர்தோன், முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இன்று மூன்றாவது பஜக ஆட்சி அதிக MPகளை மக்களவையில் வைத்து உள்ள கட்சி, மைனாரிட்டி அரசு அல்ல. உங்கள் காங்கிரஸ் கட்சி மொத்தம் 100ரை தாண்டவில்லை என்பது நிதர்சன உண்மை. அது இருக்கட்டும். சமீபத்தில் மைனாரட்டி அரசை 5ஆண்டு காலம் ஆக சிறந்த முறையில் ஆட்சி செய்த பெருமை ஐயா நரசிம்ம ராவையே சேரும். ஆனால் காங்கிரஸ் வாய்விட்டு சொல்லாது.


தமிழன்
ஏப் 20, 2026 11:56

நீங்க சொல்லும் மாநிலங்களில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? அதிலிருந்தே யார் அதிகம் என்று புரியலாம்


T.S.SUDARSAN
ஏப் 20, 2026 11:27

5கோடி மக்கள் இருந்தபோது 39 MP உள்ளரணர் . 8.5 கோடி மக்கள் உள்ளபோதும் 39 mp எப்படிப்போதும் . இதையாவது dmk,vckl,congress, mdmk மற்றும் கூட்டணி கட்சிகள் 1971 சென்சஸ் கையில் எடுத்தாலும் 5 கோடி தமிழ் மக்களுக்கு போதாது . 2026 மக்கள் தொகை 8.5 கோடி. ஆகவே 59 mp என்பது தான் சரி. மகளிருக்கு எப்போவும் இந்த கட்சிகள் மனம் உவந்து 20 mp கொடுக்கமாட்டார்கள். 543mp1971 சென்ச்ஸ் எடுத்தாலும் 3 தொகுதி குறையும். ஆகவே பெண்கள் தங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் dmk+மேற்படி கட்சிக்கு வோட்டை போடக்கூடாது. இலவசதிற்க்கு ஆசை படாமல் நீங்கள் வோட்டை போட்டல் நீங்கள் செய்துவிடுவீர்கள். உங்கள் ரெப்பெர்செண்டஷன் பார்லிமென்டில் மிக முக்கியம். உங்கள் உரிமையை காப்பாட்டிக்கொள்ளுங்கள். DMKthortal உங்களுக்கு நடக்கும் பாலியில் தொல்லை ஒழியும் . நீங்கள் பின்னாட்களில் யாரையும் சார்த்திருக்காமல் நீங்களே உங்களை கபர்ட்க்கொள்ளம். நீதிமன்றம் ,வக்கீல்கள் ,போலீஸ் என்கிற அல்லககை இருந்து உங்களை நீங்களே காத்துக்கொள்ளவும். முடிவை பெண்களிடமே விட்டுவிடுகிறேன்.


Indianதமிழன்
ஏப் 20, 2026 11:25

பார்லிமென்ட் தொகுதிகளை 543 லிருந்து 50 சதவீதம் உயர்த்தி 515 ஆக மாற்றும்போது, அனைத்து மாநிலங்களிலும் அதே 50 சதவீதம் பார்லிமென்ட் தொகுதிகளை உயர்த்துவதுதான் சரி. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொகுதிகளை 40 லிருந்து 60 ஆக மாற்றுவதுதான் தீர்வு.


கண்ணன்
ஏப் 20, 2026 11:07

ஐயா, உங்களுக்கும் இது புரியவில்லையெனல் என்னத்தைச் சொல்வது…!


Mohan
ஏப் 20, 2026 10:55

40 ஆக இருந்தாலும் 59 ஆக போனாலும் ஒன்னும் கிழிக்க போறது இல்ல ...சும்மா கான்டீன் ல போயி தின்னு தீப்பாங்க ..அவுங்களுக்கு பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் வேற ....இருக்கிறதே போதும் எதுக்கு வெட்டி செலவு .... பெண்களுக்கு 33 சதவீதம் எதுக்கு ...உள்ளாட்சில குடுத்து அவுங்க கணவன்மார்கள், மச்சினன் , தம்பி , ஒன்னுவிட்ட சித்தப்பா இவுனுக தான் ஆளுறாங்க ..இதுல பாராளமன்றத்துல வேற குடுக்கணும் ...இப்போவே ஒருத்தியும் சோறு ஆக்குறது இல்ல ..புள்ளைங்கள பாக்குறது , மாமனார் மாமியாரை பாக்குறது இல்ல குடும்பம் பூரா கூட்டிசெவுற போகுது ......எல்லாரையும் வெக்கவேண்டிய இடத்துல வைக்கணும் ....ஆளானப்பட்ட அமெரிக்காவே இதை முன்னெடுக்கல ..இந்தியா என்னத்த பெருசா சாதிக்க போகுது ...


Seekayyes
ஏப் 20, 2026 16:56

#Mohan Coimbatore அவர்களே, நாம 2026க்கு வந்துட்டோம், ஹும் இன்னும் 1826லேயே இருந்தா எப்படி. ஆண்களுக்கும் தன் அப்பா, அம்மா, தான் பெத்த குழந்தைகள பாத்துக்குற பொறுப்பு இருக்கு. கூடவே சமைக்க கத்துக்கிட்டா குறைஞ்சு போயிட மாட்டீங்க. எழுந்திறிச்சு வாங்க, இந்த உலகம் எல்லோருக்குமானது.


Madras Madra
ஏப் 20, 2026 10:53

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி பின் மறுவரையரை செய்தால் தான் பாதிப்பு இது புரியாமல் குதிப்பது அரசியல் மட்டுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை