உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / வளர்ச்சிக்கு வழிகாட்டும் மத்திய அரசின் பட்ஜெட்!

வளர்ச்சிக்கு வழிகாட்டும் மத்திய அரசின் பட்ஜெட்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறவில்லை. ஆனாலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த பட்ஜெட்டில், குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்கள் உள்ளன. 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நிதி பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டை விட அதிகரித்து, 5,92,344 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள் ளது. வரும் நிதியாண்டில் இது 4.3 சதவீதமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. கடன்களை பொறுத்தவரை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு நிதியாண்டில் கணிக்கப்பட்ட 56.1 சதவீதத்தில் இருந்து, வரும் நிதியாண்டில் 55.6 சதவீதமாக குறையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசின் மொத்த செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில், 12.21 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டு செலவுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது, நல்ல அம்சமாக உள்ளது. நடப்பு நிதியாண்டில், மூலதன செலவுகளுக்கு 11.11 லட்சம் கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் நிகர வரி வருவாய் 28.7 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த சந்தை கடன் 17.20 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரோக்கியம் மற்றும் தொழில்நுட்ப துறையை ஊக்குவிக்கும் வகையில், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஏழு அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற மின்னணு சாதனங்கள், மின்சார வாகன பேட்டரிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. அத்துடன், தோல் பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், காபி, இறக்குமதி செய்யப்பட்ட மது பானங்கள் மற்றும் உரங்கள் விலை உயரும். அதாவது, பல துறைகளில் செலவுகளை குறைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே சுங்க வரி விலக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் நிதி அழுத்தங்களை குறைப்பதை நோக்கமாக கொண்டும், பட்ஜெட்டில் பல சாதகமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், பட்ஜெட்டில் தமிழகத்திற்கான அறிவிப்புகளாக சென்னை - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை அதிவேக ரயில் பாதை உருவாக்கப்படும்; அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லுார், சுற்றுலா பயணியருக்காக திறந்து விடப்படும். பொதிகை மலையில் மலையேற்ற பயிற்சியாளர்களுக்காக வழித்தடம் அமைக்கப்படும், பழவேற்காடு ஏரியில் பறவைகள் கண்காணிப்பு பாதைகள் உருவாக்கப்படும், தமிழகத்தில் உள்ள கோவில் நகரங்கள் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் தருவதாக அமைந்து உள்ளது. இருப்பினும், தமிழக அரசு எதிர்பார்த்த சில அறிவிப்புகள், பட்ஜெட்டில் இடம் பெறாதது, ஆளுங்கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியையும், செலவுகளை கட்டுப்படுத்தி, உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப துறைகளை மேம்படுத்துவதுடன், வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் கவனம் செலுத்தியிருப்பது நல்ல அறிகுறியே. முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், வரும் காலங்களில் வளர்ச்சியை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

A.Gomathinayagam
பிப் 09, 2026 14:19

அரசு தரவு நுகர்வோர் குறியீடு இரண்டு விழுக்காடுக்குள் இருக்கிறது என சொல்கிறார்கள்.ஆனால் விலைவாசி ஏறி கொண்டே இருக்கிறது குறிப்பாக மருந்து பொருட்கள் சாமானியர் சாப்பிடும் கடலை மிட்டாய் கூட நாற்பது விழுக்காடு விலை உயர்ந்து விட்டது


Tamilselvan,Kangeyam
பிப் 09, 2026 21:28

கோமதி இனிமேல் நீ கடலை மிட்டாய் தின்பதற்கு பதில் திருநெல்வேலியின் இருட்டுக் கடை அல்வாவை சாப்பிடு உன் கோபம் தணிந்து விடும்.


ஜெகதீசன்
பிப் 09, 2026 12:43

தொழில் துறை மற்றும் அந்நிய வர்த்தக முன்னேற்றம் முக்கியம் என்றாலும் கூட, அது மட்டுமே பட்ஜெட்டாக இருக்க கூடாதே. மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை சற்று எளிதாக்க சில அம்சங்கள் இருந்திருக்க வேண்டும். அதற்காக வேறு சிலவ‌ற்றை விட்டு கொடுக்கலாம். உணவு பொருட்களின் விலையை குறைக்க விவசாயிகளின் குறைந்த பட்ச விலை பாதிக்காத வகையில் சந்தையில் கூடுதல் பொருட்கள் விநியோகம் ஆக ஏற்பாடு பண்ணனும். அதே போல பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரூபாய் மதிப்பை ரிசர்வ் வங்கி உயர்த்தனும், அதில் தலையிட போவதில்லை என ஒதுங்க கூடாது.


SULLAN
பிப் 09, 2026 11:54

வளர்ச்சிக்கு வெறும் வழியை மட்டும் காட்டும்?? அப்போ வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்ல?? வெறும் வழியை மட்டும் காட்டி கொண்டு இருந்தால்? ஆட்சியாளர்கள் வெளியேறுவதறகான வழியை மக்கள் காட்டி விடுவார்கள்.


vivek
பிப் 09, 2026 14:02

டாஸ்மாக் அறிவு


P. SRINIVASAN
பிப் 09, 2026 10:40

நாங்க சத்தியமா நம்பிட்டோம்... இது ஒன்னும் புதுசில்லையே எங்களுக்கு....


vivek
பிப் 09, 2026 11:18

சீனுவுக்கு குடும்பத்திற்கும் டெய்லி இருநூறு வந்தா போதும்


Mario
பிப் 09, 2026 09:57

யாரோட வளர்ச்சிக்கு?


vivek
பிப் 09, 2026 11:19

இது தெரியாம நீ எதுக்கு லண்டன் சந்துல சுத்திக்கிட்டு இருக்கே


Sivaprakasam Chinnayan
பிப் 09, 2026 08:39

ஓ அப்படியா


தெய்வேந்திரன்,மண்டபம் இராமநாதபுரம் மாவட்டம்
பிப் 09, 2026 09:44

தற்குறிகளுக்கு பொருளாதார பாடம் எடுக்க முடியாது எனவே இப்படித்தான் கேட்பார்கள்...


SUBBU,MADURAI
பிப் 09, 2026 07:40

பிரதமர் மோடியின் கீழ் பாரதத்திற்கு இது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகும். இந்த இடைக்கால இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டது. இந்தியா அமெரிக்க கூட்டு அறிக்கையின் படி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு $30 டிரில்லியன் அமெரிக்க சந்தை திறக்கிறது பரஸ்பர அமெரிக்க வரிகள் 18% ஆக குறைக்கப்பட்டது பொதுவான மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் வைரங்கள், விமான பாகங்கள் மீதான வரிகள் பூஜ்ஜியமாக உள்ளன ஜவுளி, ஆடைகள், தோல், காலணிகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான பெரிய லாபங்கள் பிரிவு 232 விலக்குகள், ஆட்டோ பாகங்கள் ஒதுக்கீடு மற்றும் முக்கிய மருந்து ஆதாயங்கள் பாதுகாக்கப்பட்டன உணர்திறன் வாய்ந்த விவசாயம் மற்றும் பால் பொருட்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன, விவசாயிகளின் நலன்களில் சமரசம் இல்லை MSME கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைகள் ஏற்றுமதிக்கு வலுவான உந்துதலாகும். பிரதமர் மோடி மற்றும் பியூஷ் கோயல் இருவரால் இயக்கப்படும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இது ஒரு உண்மையான திருப்புமுனை.


டி சங்கரநாராயணன் ஈரோடு
பிப் 09, 2026 06:52

எதிர்க்கட்சிகள் பாராட்ட போவதில்லை. ஆளுங்கட்சியும் குறை சொல்லப் போவதில்லை. அரசியலில் இதுதானே எழுதப்படாத விதிமுறை ?


முக்கிய வீடியோ