உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / மதம் மாறியவர்கள் குறித்த தீர்ப்பு: தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம்!

மதம் மாறியவர்கள் குறித்த தீர்ப்பு: தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என, உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகராக பணியாற்றி வருகிறார். அவர், தன்னை ஜாதி ரீதியில் துன்புறுத்துவதாக கூறி, ராமிரெட்டி என்பவர் மீது, எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 'ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால், சின்தடா ஆனந்த், பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விட்டார். எனவே, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அவர் பாதுகாப்பு கோர முடியாது' என, தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 'ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தினர் தவிர, பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது. வேறு மதத்திற்கு மாறும் போது, அதுவரை அனுபவித்து வந்த பட்டியலின அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர். 1950ல் இயற்றப்பட்ட பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவில், இதுபற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மாற்று மதம் மாறியவர்கள், பட்டியல் இனத்தவர்களாக கருதப்பட மாட்டார்கள். பிறப்பால் பெற்ற பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என, தீர்ப்பு வழங்கியுள்ளது. நம் நாட்டில் ஜாதி என்பது, நீண்ட காலமாக சமூகங்களுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. அதனால், மத மாற்றத்தால் ஜாதிய பாகுபாடுகள் மறைந்து விடுவதில்லை. கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு மாறும் பட்டியல் ஜாதியினர், அங்கும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை நிலவரம். மேலும், சீக்கிய மதமானது கொள்கை ரீதியாக ஜாதிய அமைப்பை நிராகரிக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாகவும், மற்ற சில விவகாரங்களிலும், அந்த மதத்திலும் பிரிவினைகள் தொடர்கின்றன. 'சமத்துவமற்ற ஒரு சமூகத்தில், மற்றொரு மதத்திற்கு மாறுவது, மதம் மாறியவர்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதில்லை. எனவே, மதம் மாறியவர்கள் எஸ்.சி. - எஸ்.டி., அந்தஸ்தை கோர முடியாது' என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நியாயமற்றது என்பது ஒரு சாராரின் வாதமாகும். ஆனாலும், பணத்தாசை காட்டியும், வேறு சில சலுகைகள் தருவதாக கூறியும், மதமாற்ற நடவடிக்கைளை மேற்கொள்வது, நாடு முழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி மதம் மாறியவர்கள், அங்கும் ஜாதிய பாகுபாடுகள் தொடர்கின்றன என்பதை அறிந்து வருத்தம் அடைகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வே, சின்தடா ஆனந்த் விவகாரத்திலும் நிகழ்ந்துள்ளது. அத்துடன், பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீடு என்பது, அந்த சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மேம்பட்ட நிலைக்கு வர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு, அரசியல் சட்டத்தை இயற்றியவர்களால் கொண்டு வரப்பட்டதாகும். எனவே, தற்போதைய தீர்ப்பு சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாக மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதுபோல ஹிந்து அல்லாத பிற மதங்களுக்கு மாறினால், அவர்கள் தங்கள் உரிமைகளை இழப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 2007-ம் ஆண்டில், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை, கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதன்பின், இந்த விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான கமிஷன், இன்னும் தன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த விஷயம் தொடர்பான பல சட்டச்சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. அவற்றை எல்லாம் தீர்க்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். இருப்பினும், தற்போதைய இந்த தீர்ப்பு, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் என்று நம்பலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Barakat Ali
மார் 30, 2026 11:02

திமுக பேச்சளார், தமிழன் பிரசன்னா கிருஸ்தவ மதத்தைசேர்ந்தவர். அவர்எழும்பூர் தனி தொகுதியில், எப்படி போட்டியிட முடியும்? அவர் தீவிரமாக கிருஸ்தவ மதத்தை பின்பற்றுபவர், தினமும் சர்ச்க்கு போகிறவர். ஹிந்து பட்டியல்இன மக்கள் எவளோ பேர், வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மதம் மாறிய ஒருவருக்கு தனி தொகுதில திமுக எப்படி சீட் கொடுக்க முடியும்???? எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் .....


sankar
மார் 30, 2026 10:36

அந்த சலுகையை அனுபவித்து கலெக்டர் ஆனவரை பார்த்து இருக்கிறோம்


sankaran
மார் 30, 2026 10:34

இது ஏமாற்று வேலை.. இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தையும் ஒரு காரணியாக சேர்க்க வேண்டும்.. அப்போ இந்த திருட்டுத்தனம் நடக்காது...


R.Kumaresan
மார் 30, 2026 10:17

முதலில் மதம் மாறுவதை தடுக்க வேண்டும்...


Thirumal Kumaresan
மார் 30, 2026 09:41

இங்கே இந்த சட்டம் நீக்கப்படவேண்டும், சாதீய வழியில் இட ஒதுக்கீடு கொடுப்பது நாட்டுக்கு கேடு, மதமாற்றம் அதைவிட கேடு பிடித்தது. மக்களுக்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டுமே சலுகை வழங்க வேண்டும்


GMM
மார் 30, 2026 08:42

மத மாற்றம் வழிபாடு, கலாச்சாரம், மனநிலை மாற்றம். முழுதும் உள்நோக்கம் கொண்டது. பூர்வீக இந்துக்களுக்கு இருக்கும் உரிமை, சலுகைகள் அந்நிய மதம் மாறிகளுக்கு கூடாது. ஓட்டுரிமை, குடியுரிமை கட்டாயம் கூடாது. சர்வதேச மத சட்டங்கள் இருந்தால் நடுநிலையாக இருக்காது. வாழ்வுரிமை மட்டும் தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சில காலங்களில் நீதிபதி வாரிசு தபெதார் நிலை தான் அடைய முடியும்.


ஆரூர் ரங்
மார் 30, 2026 08:15

மதம் மாறியவர்களுக்கு உள்ள அதே சமூக ஒதுக்கல் பிரச்சனை OBC, SC பெண்களை மணந்த முன்னேறிய சமூக ஆண்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் உள்ளது. அவர்களுக்கும் SC, BC களுக்கான சலுகைகளை அளிக்க வேண்டுமென அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்களா?


ஆரூர் ரங்
மார் 30, 2026 08:10

இந்த வழக்கு இடஒதுக்கீடு பற்றியதல்ல. தீண்டாமை பற்றியது. ஆனால் கிருஸ்தவ மதம் தீண்டாமையை ஏற்கவில்லை. தீண்டாமையை காரணமாகக் கூறி போட்ட வழக்கின் உள்நோக்கம் இடஒதுக்கீட்டை பிடிப்பதே. 40 ஆண்டுகளுக்கு முன்பு சூசை வழக்கில் மதம் மாறியவர்கள் பட்டியலினமல்ல என்று தீர்ப்பு வந்துவிட்டது. மீண்டும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது.


Iyer
மார் 30, 2026 06:36

ஹிந்துக்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமை என்று சட்டம் வந்தால் மதம்மாறும் பிரச்சனை வெகுவாக தீரும்


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2026 06:21

கடைசி வரை பட்டியலின மக்களின் உரிமைகளை திருடும் மதபோதகர் மீது வழக்கு பதிய சொல்லாத கோர்ட்டுக்கு கண்டனம் தெரிவிக்க கூட யாரும் இல்லையே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை