உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுமா?

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சியினர் தான் முதலில் போராட்டத்தை துவக்கினர். பின்னர் காங்கிரஸ் மற்றும், 'இண்டி' கூட்டணி கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளதால் எதிர்க்கட்சிகளின் போராட்டமாக மாறியுள்ளது.இந்த போராட்டம் தசரா பண்டிகை உள்ளிட்டவை காரணமாக சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும், நவம்பர், 1ம் தேதி டில்லியில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளன. போராட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற முனைப்போடு, காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வரும், 30ம் தேதி டில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாதிரி பார்லிமென்ட் நடத்தவும், அப்போது, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் தீர்மானித்துள்ளன. இதற்கிடையில், ஞானேஷ் குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.அரசியல் சட்டத்தின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் அதே கடுமையான பார்லிமென்ட் நடைமுறைகளின்படியே, தலைமை தேர்தல் கமிஷனரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது.அதாவது, தேர்தல் கமிஷனருக்கு எதிராக பார்லிமென்டில் கொண்டு வரப்படும் தீர்மானம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எம்.பி.,க்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் தரப்பில் முதல் முறையாக அளிக்கப்பட்ட நோட்டீஸ், லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது முறை அளிக்கப்பட்ட நோட்டீஸ் ராஜ்யசபாவில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், 'தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக, எதிர்கட்சிகள் மீண்டும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், அது விதிகளின்படி பரிசீலிக்கப்படும்' என, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.அதேநேரம் மத்திய அரசோ, 'தேர்தல் கமிஷன் போன்ற ஒரு சுதந்திரமான அரசியல் சட்ட அமைப்பின் உள் விவகாரங்களில், மத்திய அரசு தலையிடாது; அவ்வாறு தலையிடுவது அதன் தன்னாட்சியை பாதிக்கும்' என்றும் விளக்கம் அளித்துள்ளது. 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தலைமை தேர்தல் கமிஷனரை நியமிக்கும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டும்' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.ஆனால், மத்திய அரசோ பார்லிமென்டில், 'தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம் 2023'ஐ நிறைவேற்றியது. இதன்படி, தலைமை நீதிபதிக்கு பதிலாக, பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் நியமன குழுவில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுப்பதில், மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது.இச்சட்டத்தின் படியே தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரும் நியமிக்கப்பட்டார். அதனால், அவருக்கு எதிராக மத்திய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்காது என்பது உறுதியாக தெரிகிறது.தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறுமா என்பது, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் முன்வைக்கும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு மற்றும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை பொறுத்தே அமையும்.இந்திய அரசியல் வரலாற்றில், தலைமை தேர்தல் கமிஷனர் போன்ற அரசியல் சட்ட ரீதியான பதவிகளில் இருப்பவர்களை நீக்குவது அல்லது அவர்களுக்கு எதிரான போராட்டங்கள் தன்னிச்சையாக வெற்றி பெறுவது எளிதானது அல்ல. அதனால், எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே. இல்லையெனில், மத்திய அரசே தாமாக முன்வந்து, ஞானேஷ்குமார் பதவி விலகும்படி கேட்டுக் கொண்டால், பிரச்னை முடிவுக்கு வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

subramanian
அக் 26, 2026 21:12

ராஹுல் திட்டங்கள் படுதோல்வி அடையும்.


Venuviswanathan Pa
அக் 26, 2026 18:11

காங்கிரஸ் இருக்கும் வரை பிஜேபி ஆட்சி தான்


Mohan
அக் 26, 2026 17:30

தேர்தல் கமிஷனர் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஏன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்றும் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் ஈல்லை. அவரை கமிட்டியில் சேர்த்தால் புனிதமாகிவிடுமா? அவர்களது கொலீஜியம் தேர்வு செய்த நீதிபதி ஒருவர் வீட்டில் இருந்த பணத்துக்கு எந்த பதிலும் இல்லை?. வாக்காளர்கள் எந்த ஊரிலும் அதிக எண்ணிக்கையில் வந்து புகார் தரவில்லை. வாக்காளர்கள் பெயர் விடுபட்டால் சேர்க்க வாய்ப்பு தரப்படுகிறது. இல்லை என்று சொல்பவர்கள் துரோகிகள். பொன்னான வாய்ப்பாக மத்திய அரசமைக்க 2024 லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் 5 நாட்கள் இண்டி கூட்டணி தங்களுக்குள் சண்டையிட்டு அதனை இழந்தனர். வாய்ப்பு கிடைத்தபோது விட்டுவிட்டு இப்போது லபோதிபோ என்றால் என்ன பயன்?. மேலும் காங்கிரஸூக்கும், அவர்களது பாக்கிஸ்தான் ஆதரவு கூட்டணியினருக்கும் ஞானேஷ் குமார் ஆர்டிகிள் 370 ஐ நீக்கிய மசோதாவை தயாரித்ததால் , அவர்மீது பயங்கர வெறுப்பு அதை தீர்த்துக் கொள்ள இந்த உப்பு பெறாத விஷயத்தை ஊதி பெரிது படுத்துகின்றனர்.எல்லாம் திருடர்கள்


G Mahalingam
அக் 26, 2026 17:05

ராகுல் காந்திபெயர் தவறு மற்றும் கரப்பான் பூச்சகக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை. விஜய் போல தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும். ஆனால் வெளி நாட்டு பணத்தை வாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதே குறிக்கோள்.


HoneyBee
அக் 26, 2026 17:05

இவரையும் ராஜினாமா செய்ய வைத்தால் பாஜக மத்திய அரசு கதை முடியும். இதையே ஆயுதமாக கொண்டு பல பிரச்சினைகள் வரும். நீக்கப்பட்ட வர்கள் எங்க வந்து போராட்டம் நடத்தினர். வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமே இவர்கள் குறிக்கோள். இந்திய இந்துக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்


manian
அக் 26, 2026 16:56

EC should publish in the media the names of all dead voters in all states and challenge the opposition to disprove them


Barakat Ali
அக் 26, 2026 14:31

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று கனவு கண்டவர்களுக்கு களத்தில் ஆதரவு இல்லை .....


duruvasar
அக் 26, 2026 12:28

எதிர்க்கட்சிகளுக்கு ஊடகங்களில் ஆதரவு அமோகமாக இருக்கிறது.


Rajasekar Jayaraman
அக் 26, 2026 11:18

அடுத்து ராகுல்கான் பிரதமர் ஆகவேண்டும்


Nathan
அக் 26, 2026 10:49

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமாருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றால் நிச்சயம் இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தை மற்றும் அவமானத்தை சந்திக்க நேரிடும். தீயசக்திகள் நாட்டை நாசமாக்கி அன்னியர்கள் கைப்பாவை அரசுகள் மட்டுமே இந்தியாவை ஆள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடும்