உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / வளைகாப்புக்கு வளையலை தேடினார் வருமான வாய்ப்பை கண்டுபிடித்தார்!

வளைகாப்புக்கு வளையலை தேடினார் வருமான வாய்ப்பை கண்டுபிடித்தார்!

வளையல் என்றால் ஆசைப்படாத பெண் உண்டா! கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்த, 33 வயதான பவித்ராவை, இந்த ஆசை ஒரு பெரிய தொழில்முனைவோர் ஆகவே மாற்றி விட்டது. இவர் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. கண்ணாடி வளையல் விற்பனையால், இவருக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இவரை தொழில்முனைவோர் ஆக மாற்றிய, அந்த 'கலகல' வரலாறு இதோ உங்களுக்கும்! '' என் வளைகாப்புக்கு ஆசையாக கண்ணாடி வளையல் தேடினேன்; கிடைக்கவில்லை. அந்த குறிப்பிட்ட கண்ணாடி வளையல்களுக்கு, நல்ல மவுசு இருப்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான், இதை ஒரு பிசினஸ் ஆக செய்தால் என்ன என தோன்றியது. இதோ பிசினஸ் ஆகி விட்டது,'' ''இன்னும் விளக்கமாக சொல்லுங்களேன்...'' ''பல்வேறு மாநிலங்களில் இருந்து கண்ணாடி வளையல்கள் வாங்கி, 'பிளாசம் வெட்டிங் அசசரிஸ்' என்ற பெயரில், கண்ணாடி வளையல்கள் மட்டும் விற்க துவங்கினேன். சமூக வலைத்தளங்கள் உதவியாக இருந்தன. நாளடைவில் பலர் இதை விரும்பினர்; தொழிலை விரிவுபடுத்தினேன்,'' ''கண்ணாடி வளையல்களுக்கு அவ்வளவு டிமாண்ட் இருக்கிறதா என்ன,'' ''என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்...திருமணம், வளைகாப்பு, காதுகுத்து போன்ற சுப நிகழ்வுகளுக்கு, இன்று பல பேர் கண்ணாடி வளையல்களை வாங்கி செல்கின்றனர். குந்தன், பீட்ஸ், கடா, வாட்டர் கிளாஸ், பார்டர் வளையல், போன்ற பல ரகங்களில் வளையல்கள் விற்பனை செய்து வருகிறோம். ஆன்லைன், ஆப்லைன் முறையில் வாடிக்கையாளர்கள் கோவை மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வாங்குகின்றனர்,''. ''அந்த குறிப்பிட்ட கண்ணாடி வளையல்களுக்கு, நல்ல மவுசு இருப்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான், இதை ஒரு பிசினஸ் ஆக செய்தால் என்ன என தோன்றியது. இதோ பிசினஸ் ஆகி விட்டது,''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை