நந்தினியின் நம்பிக்கை
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எவ்வளவு பெரிய கூட்டத்தையும் தன் வசீகர பேச்சால் கட்டிப்போடுவதில் இவரை மிஞ்ச முடியாது. வானொலியிலும், சின்ன திரையிலும் இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினால் யாரும் இடைவெளியின்றி கேட்டும், பார்த்துக் கொண்டும் தான் இருப்பர். அந்தளவுக்கு சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வலம் வருகிறார் ரேடியோ ஜாக்கி நந்தினி. ஆங்கர், இன்புளுயன்சர் என பல முகங்கள் இவருக்கு. பல எப்.எம்., சேனல்களில் ரேடியோ ஜாக்கியாக வலம் வந்தவர் சில காலம் 'டிவி' சேனல்களில் வீடியோ ஜாக்கியாகவும் திறம்பட செயல்பட்டார். கடந்த பத்தாண்டுகளில் 750க்கும் மேற்பட்ட கல்லுாரி, கார்ப்பரேட் நிறுவன லைவ் ேஷாக்களை சிறப்பாக தொகுத்து வழங்கி பார்வையாளர்களை பரசவப்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார்.தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசியதிலிருந்து இனி...சேலம் சொந்த ஊர். அங்கு பள்ளி, கல்லுாரி முடித்தேன். 6வது வகுப்பு படிக்கும் போதே 'டிவி', வானொலி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதை பார்த்தும், கேட்டும் நாமும் எதிர்காலத்தில் இதுபோல ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் அம்மா விடாப்பிடியாக இருந்தார். ஆனால் நான் வானொலியில் பேசி, மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன்.பிளஸ் 2 படித்த போது சேலத்தில் உள்ளூர் எப்.எம்.,சேனலில் ஆங்கரிங் தேர்வு நடந்தது. நான் நன்றாக பேசுவதை பார்த்த தோழிகள் அம்மாவிடம் சிபாரிசு செய்ய, அம்மாவும் பச்சைக்கொடி காட்டினார். பிளஸ் 2 முடித்த கையுடன் எப்.எம்.,ல் ரேடியோ ஜாக்கியாக சேர்ந்தேன். இருப்பினும் அம்மா விருப்பப்படி கல்லுாரியில் சேர்ந்தும் படித்தேன். படித்து கொண்டே சில பொதுநிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினேன். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லைவ் ேஷாக்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிட்டியது. ேஷாவை உற்சாகத்துடன் கலகலப்பாக கொண்டு சென்றது பார்வையாளர்களிடம் பாராட்டுதல்களை பெற்று தந்ததுடன் வெளி உலகிற்கும் என்னை காட்டியது.கடந்த பத்தாண்டுகளில் 750க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லுாரி கலை விழா, நிறுவனங்களில் புராடக்ட் அறிமுக ேஷாக்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன். கிடைத்த ஓய்வு நேரங்களில் இன்ஸ்டா, பேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் செயல்பட்டேன். அதில் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் கமென்ட் என்னை திக்குமுக்காட செய்து விட்டது. சில கார்ப்பரேட், வர்த்தகர்கள், ஜூவல்லரிகள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க இன்புளுயன்சரானேன். அந்நிறுவனங்களுக்காக மாடலிங் செய்து வருகிறேன்.தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை வாய்ப்புகளும் வருகிறது. சரியான வாய்ப்பு, நேரத்துக்காக யோசித்து வருகிறேன். கிடைத்தால் அதிலும் சாதிப்பேன்.பெண்கள் பிடித்த விஷயங்களை நன்கு கற்று அதுதொடர்பான துறைகளில் இறங்கினால் வெற்றி பெறலாம். இன்று வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதை பயன்படுத்திக் கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். எல்லோருக்கும் பிடித்தவளாக இருப்பது தான் என் ஆசை என்றார்.